ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுரவ விகாரைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 49 வயதுடைய வதுரவ-வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக வெயங்கொட பொலிஸார் குறிப்பிடத்தக்கது