அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
Spread the love

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது , ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்துள்ளதாக அவரது உறவுகள் தெரிவித்து கொண்டனர் .

இலங்கையில் இருந்து உயிர் ஆபத்து தஞ்சம் கோரி அஸ்ரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர், 30 வருடங்கள் கழித்து மீளவும் தனது தாய் நாட்டை பார்ப்பதற்காக, பல கனவுகளை சுமந்து ஆசை ஆசையுடன் சென்று இருக்கின்றார் .

கனவுகள் நினைவாகும்

அவரது அந்தக் கனவுகள் நினைவாகும் என்கின்ற கற்பனை விடயம் நினவு பெறுவதற்கு முன்னதாகவே ,அங்கே எதிர்பாராத சம்பவம் ஒன்று அவருக்கு இடம்பெற்றது.

இலங்கையினுடைய அரச புலனாய்வு துறையால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவுகள் தெரிவிக்கின்றனர் .

தனது தாய்நாடு சென்று அங்கு பாரிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, ஒரு முன்னோட்டத்தை பார்த்து வருவதற்காக சென்ற இவருக்கு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எமது நாட்டுக்கு வருகை தருவதற்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் எவருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை ஆளும் அரசு தெரிவித்து வருகிறது .

இலங்கையின் விமான நிலையத்தில்

இந்த வேளையில் தனது தாய் நாடு சென்று தனது தாய் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பு நோக்குடன், பொருளாதார நடவடிக்கை கருதி இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தவர் ,இலங்கையின் விமான நிலையத்தில் பயங்கரவாத குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்கின்ற வகையில் அந்த குற்றச்சாட்டை மையமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

தமிழிழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழிழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு 15 ஆண்டுகளை எட்டுகின்ற இந்த வேளையில் மீளவும் புலிகளுடைய பெயரைச்சொல்லி புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இழக்க வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் கைதுகளை மேற்கொண்டு வருகின்றது .

இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு வருகின்ற தமிழர்கள் நாங்கள் கைது செய்வோம் என்கின்ற விடயத்தினை ரணில் அரசாட்சியில் எடுத்து கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இலங்கை செல்வதற்கு பல வெளிநாட்டு தமிழர்கள் வெளிநாட்டு செல்வந்தர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் .

முதலீடுகளுக்கு பாதுகாப்பு

தமது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் தற்பொழுது இந்தியா தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் யார் என்பதை இலங்கை ஆலமரசுகள் முடிவெடுத்து செயலாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.