அவருடன் நடனமாட சிரமப்பட்டேன் – ராஷ்மிகா

Spread the love

அவருடன் நடனமாட சிரமப்பட்டேன் – ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா, அதையடுத்து மகேஷ்பாபுவுடன் சாரிலேரு நீகேவரு என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் பற்றி ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘மகேஷ்பாபு ஒரு உண்மையான

சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் நடிக்கும்போது அவர் எனக்கு உத்வேகம் கொடுத்தார். அவருடன் நடனமாடும்போது நான் நிறைய சிரமப்பட்டேன்.

மகேஷ் பாபு – ராஷ்மிகா

அவரது வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால் ஒவ்வொரு முறையும் நடனத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் நடனமாடினேன்.

சினிமாவில் எனது கேரியரை தொடங்கிய போதே மகேஷ்பாபுவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply