அழுதிட வைத்தெங்கே நீ போனாய்
நேற்ரெங்கள் நிழலாகி நின்றாய்
இன்றேன் எம் விழியில் நீர் தந்தாய்…?
காற்றாகி நீ இன்று போய் விட்டாய்
கண்ணீரால் தவிக்கின்றோம் பாராய் ….
ஊற்றானாள் உன் முன்னே வீழ்ந்ததினால்
உடல் விட்டு நீயும் பறந்தாயோ …?
தேற்றுவார் இன்றி உன் உற்றாள்
தேய்கிறாள் இவளை யார் கப்பார் …?
கூற்றுவா ஏனின்று இவன் அழைத்தாய்
கூடு விட்டேனோ நீ பிரித்தாய் …?
பார் எங்கும் ஒளி வீசும் பிர சன்னா – நீ
பாதியில் போனது துயர் அண்ணா …
விழியிலே உந்தன் நிழல் உருத் தான்
விளையாடுது இன்றும் எம் நண்பா ….
பாசத்தை ஊற்றியே பழகியவா
பாதியில் இழந்துன்னை தவிக்கின்றோம் …!
- வன்னி மைந்தன்– ( ஜெகன் )
-ஆக்கம் -25/11/2017
நண்பன் – பிரசன்னா அவனது தாயார் இறந்த நாளில்
விழி மூடிய துயர் அறிந்த போது ….
எம் கண்ணீர் அஞ்சலி …