உன் துயரில் …..அழுகிறோம் ….!

Spread the love

உன் துயரில் …..அழுகிறோம் ….!

செந்தமிழ் பாடிய செந்நிற மேனியை
செந்தணல் இன்று தின்பதோ ..?
எம்முடல் ஆவியாய் எமக்குள் நின்றானை
எமனே நீயும் கொல்வதோ…?

வந் தமிழ் ஊரினில் வளமுடன் நிமிர்ந்தான்
வாஞ்சை வீசியே எழுந்தான் ….
உறவுகள் மிளிர உணர்வுடன் நின்றான்
உயிரை ஏனோ பறித்தாய் …?

பாடியே அழைத்து பாசத்தை வீசி
பா வலனாகியே நின்றான் …
தொட்டியை கட்டி நீரது தேக்கி
தொழும் மாடுகள் குடிக்கவே வைத்தான் ….

அறமது நீட்டி ஆர தழுவிய
அகமது வீழ்ந்தது பேரிழப்பு …
உரமது இட்டே உயர வளர்ந்தவர்
உன்னை சுற்றியே அழுதனர் ….

வேதனை தாங்கி விழிகள் கதறிட
வேலவா ஏனடா சென்றாய் …?
சாதனை நாட்டி சாவிலும் எழுந்தாய்
சாதனை யாளனாய் சென்றுவா ….!

  • வன்னி மைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -10/08/2017
    முரசுமோட்டை -இரண்டாம் கட்டை -ராசன் அண்ணாவின் ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
Home » Welcome to ethiri .com » உன் துயரில் …..அழுகிறோம் ….!

Leave a Reply