அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு
Spread the love

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு ,காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா பலி

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் தாயார் வெளிநாடு

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும்,

யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி இளைஞன் ஒருவருடன் காதல்

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் விசாரணை

உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் படி, மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை

அத்துடன், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்என்பது குறிப்பிட தக்கது .