அர்ச்சுனா

அர்ச்சுனா
Spread the love

அர்ச்சுனா

நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே

வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..

திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு

எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024