அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம் ,ஐயோ அண்ணா..
நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோட்சுடன் படுத்து இருந்தேன்..
இருவர் தலைமாட்டிலும் கதவுக்கு வெளியாலும் நின்று இருந்தார்கள்..
நான் நினைத்தேன் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் என்னை மீண்டும் அரெஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கிறார்கள் என்று..
நித்திரையில் கண்ணால் முடித்த போது நான் வேறு என்னத்தை கற்பனை பண்ண முடியும்..
ஆதலால் தான் நீங்கள் எவ்வாறு எனது குவாட்டர்ஸின் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டேன்..
அது சட்டப்படி முரணானது..
ஆனால் எனக்கு நான் நித்திரையாக போனவுடன் இவ்வளவு விடயம் நடந்ததை இப்போதுதான் ஒன்றாக யூடியூபில் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கிறேன்..
காலை 8 மணிக்கு போலீஸ் தலைமை அதிகாரிக்கு கால் பண்ணி மன்னிப்பும் கோரி எவ்வாறு இது நடந்தது யார் இதை உடைக்க சொன்னார்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று அவரிடம் சொன்னபோது நீங்கள் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் ஒன்றை போலீசில் கொடுத்து விடுங்கள் உங்களை பாதுகாக்க தான் கதவை உடைத்தோம் என கேட்டார்கள்..
ஆம் என்று சொல்லி இருக்கிறேன்..
இது ராமநாதன் அர்ஜுனா அண்ணா தயவுசெய்து யோசித்து விட்டு கருத்தை பகிருங்கள்..
தம்பி ராஜா அண்ணா இன்று வரை ஒன்றுக்கொன்று முரணாக எனக்கு சார்பாகவும் எனக்கு எதிராகவும் கருத்தை வெளிவிட்டு கொண்டிருப்பது எனக்கு நன்றாக தெரியும்…
மன்னார் கோட்சில் கூட அவர் அங்கு நின்று பிரச்சனை பட்ட போது நீதிமன்ற அவமதிப்பு என்று மறுபடியும் நான் உள்ளே போய் இருப்பேன்..
அவர் வயது முதிர்ந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கார்த்தி குளரி ஒன்றையும் செய்யக்கூடாது..
ஏற்கனவே எட்டு வழக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறேன்..
இனி மறுபடியும் வைத்தியசாலை குவாட்டர்ஸில் நான் உள்ளே இருந்து திட்டமிட்ட ரீதியில் இவற்றையெல்லாம் செய்தேன் என்று யூட்யூபில் எழுதிக் கொண்டிருப்பார்கள்..
அதனால் தான் எனக்கு கோபம் வந்தது..
எனக்கு இதுவரை உள்ள வழக்குகள் போதும்.
வைத்திய சாலையில் உள்ளே லைப் போடக்கூடாது என்று அவருக்குத் தெரியாதா..
நான் சூசைட் பண்ண போகிறேன் என்று தனக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்..
ஒருவரில் உதவி செய்கிறோம் என்று உரிமை எடுத்து அவரை தலைகீழாக மாற்றுவது முட்டாள்தனம்..
எனக்கும் தம்பி ராஜா எனப்படுகின்ற சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் எனது ஆதரவாளராக நான் எந்தக் கூட்டத்திலோ எந்த யூடியூப்பிலும் எந்த நேர்காணல் கருத்து தெரிவிக்கவில்லை..
இந்த நிமிடத்தில் நான் யாரையாவது எனது ஆதரவாளர் என்று சொல்லும்போது அவர்கள் செய்கின்ற முட்டாள்தனமான வேலைகளுக்கு எல்லாம் நான் தான் நீதிமன்றத்தில் பதில் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கும்..
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
என் மீது வைத்திருந்த அன்பு என்றே சொல்லிக் கொள்வோம்..
அதை எப்போது கண்டிக்காவிடில் நாளை ஒரு போலீசாருக்கு அடித்து விட்டு சொல்லுவார்கள் அர்ச்சுனாவில் உள்ள அன்பால் அடித்தோம் என்று..
வன்முறையையும் தனிப்பட்ட விளம்பரங்களையும் என்னால் அனுமதிக்க முடியாது அவ்வாறாயின் அரசியல் செய்ய முடியாது அது சாணக்கியன் சுமந்திரன் அரசியல்..
இது இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல்..
யாரும் என்னை தெரியும் என்னுடன் பழக்கம் இவருக்கு காசு போடுங்கள் என்று இன்றுவரை காசு சேர்க்கவில்லை..
யாரும் நான் இவரின் நண்பன் என்று சொல்லி இன்றுவரை மார் தட்டிக் கொள்ளவில்லை..
அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் என் மீது கொண்ட பாசத்திற்கு ஏற்ப நியாயமானதாக என்ன உதவி கேட்டாலும் செய்யலாம்..
அர்ச்சுனாவை தெரியும் என்பதற்காக வித்தியா படுகொலை போல் போலீசாருடன் ஒருபோதும் சொல்லப்போவதில்லை அவரை விட்டு விடுங்கள் என்று..
என்னை பின்தொடர்புலுக்கு கனிவான வேண்டுகோள் தயவுசெய்து தங்களுடைய சுயலாபத்திற்காக பின் தொடர வேண்டாம்..
உங்களுக்கு தமிழினத்தின் பால் அன்பு இருக்குமாயின் நீங்கள் என்னுடன் நிக்கலாம் நான் உங்களுடன் உயிரைத் தந்து நிற்பேன்..
- அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு
- தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
- அர்ச்சுனா சங்கு மோதல்
- காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
- இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை
- துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
- வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்
- ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
- பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
- எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்