அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Spread the love

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை நாங்கள் பின் தொடர்வோம்
எதுகை மோனைக்கு ஏன் சீற்றம்
ஏனோ உனக்கு தடு மாற்றம்

கத்தும் கடலே அமைதி கொள்
கரு வானமே இவரை பார்த்து கொள்
எத் துயர் நீ எறிந்தாலும்
எங்கள் வீரனை நாம் தொடர்வோம்

குரைக்கும் நாய்கள் வாசலிலே
கூவியே இன்று என் கண்டார்
அன்பு செலுத்தும் மக்கள் முன்
அகிலத்தில் எவர் முன் வருவார்

கொத்தி எறியும் கோடாரி
கொண்டை கழன்று விழுந்துவிடும்
அடுப்பில் எரியும் அவ்வேளை
அட டா சாம்பலாய் மாறிவிடும்

விட்டு களத்தை ஓடி விடு – நாம்
விடுதலை பெற்றிட விட்டு விடு
பற்றி எரியும் பார் முன்னால்
பகைவா இன்றே ஓடி விடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-09-2024