அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்
Spread the love

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம் ,அம்பறையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர் .

அம்பாறை பகுதியில் கடமையாற்றம் காவல்துறை சிப்பாயுடைய துப்பாக்கி ஒன்ரின் ஊடாக சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன் பொழுதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் ஒரு காவல்துறை சிப்பாயினுடைய மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் சுட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் வாய் தகராறு காரணமாகவே இந்த சுட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் போலீஸ் அதிக காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர் .

தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு அதிகரித்து காணப்படுவது இவை திட்டமிடப்பட்ட படுகொலையா என்கின்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

கடந்த வருடமும் தேர்தலில் இடம் பெறுவதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் போராளிகளை வெட்டி படுகொலை செய்து விட்டு, பின்னர் அதனை நடத்தியது அவர்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.