அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.
நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .
தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.
1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..
உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….
நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..
கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..
எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை
சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..
மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…
என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.
இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .
- அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்
- அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை
- லெபனான் காஸாவைப் போன்று அழிவை சந்திக்க நேரிடும் நெதன்யாகு
- இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள்
- 05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
- கைது 20 சீனர்கள்
- ஆயுதங்கள் தேடும் இராணுவம்
- 33 கட்சிகள் வேட்புமனு தாக்கல்
- அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள்
- ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு