அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிராமணம்
Spread the love

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம் இன்று மாலை வேளையில் செய்து கொள்வார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திஸாநாயக்கா தெரிவு செய்யப்படுகின்ற விடயம், பெரும் பர பரப்பை கொழும்பு அரசியலில் ஏற்படுத்தியுள்ளது .

தாமே இலங்கையில் வெற்றி பெற்றவர்கள் என் முழங்கி வந்த ,மகிந்த குடும்ப ஆட்சியும் ,அரசியலும் ,இந்த தேர்தலில் காணாமல் போயுள்ளது .

தமிழர்களது சாபம் மகிந்த குடும்பத்தை துரத்தியடித்துள்ளதை ,நாமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் எடுத்து காண்ப்பிக்கின்றன .

அவ்வாறான கால பகுதியில் இவ்வாறான மகிந்த குடும்ப ஆட்சியினால் பழிவாங்க பட்ட ஜேவிபி, இப்பொழுது இலங்கை அரியணையில் எறியுள்ள சம்பவம் இவர்களை அலறவைத்துள்ளது .

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க வெற்றி பெற்ற பின்னர் ,அவர் முன்னெடுக்கும் நடவடிக்கை மீள் இலங்கை அரசியல் லஞ்ச பெருச்சாளிகளை ஓடவைக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

சிங்கள இனவாத பகுதிகள் எங்கும் ,ஏன் மகிந்த கோட்டைகள் எங்கும் அனுரா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள செயல் ,கண்டு மக்கள் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வதை காணமுடிகிறது .