அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்
Spread the love

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்
ஒரு குடும்பத்தை மட்டுமல்ல பல குடும்பங்களை சின்னாபின்னம் ஆக்கிவிட்டு யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கான பதிவுகள் இது.


எனது குழந்தையின் அம்மாவை நான் ஒருபோதும் கைநீட்டி அடித்ததே இல்லை.
நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதை என் குழந்தை மட்டுமே அறியும்.
நாங்கள் பிரிந்து இருந்தும் கூட இன்றுவரை என் பிள்ளையின் அம்மாவை நான் பிரிக்கவில்லை.


பல பேருக்கு விட்டார்கள் விவாகரத்தின் பின்பு பிள்ளையை வென்றெடுத்த பின்பும் எதற்காக அம்மாவிடம் கொடுக்கிறீர்கள் என்று.
ஒரு குழந்தையின் அம்மாவை பிரிக்கும் உரிமையை எந்த அப்பாக்களும் எடுக்கக்கூடாது.


அவன் இரு அணுக்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்.
எனக்கு என் அம்மாவை பிடிக்கும்..
என் அப்பாவையும் பிடிக்கும்..


அப்பாவை அதிகமாக பிடிக்கும் என்பதற்காக அம்மாவிடம் செல்லாதே என்று கூறும் தகப்பன் நான் இல்லை..


இந்த அழகிய குடும்பம் இப்போதும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.


சட்டரீதியாக நாங்கள் விடை பெற்றாலும் மனரீதியாக என் குழந்தைக்காக என்றுமே விடப் போவதில்லை.
அது அவனின் அம்மா..


வைத்திய கலாநிதி
இராமநாத அர்ச்சுனா.