அதிபர்கள் நாளை போராட்டம்

அதிபர்கள் நாளை போராட்டம்
Spread the love

அதிபர்கள் நாளை போராட்டம்

அதிபர்கள் நாளை போராட்டம் ,ஆசிரியர்கள் அதிபர்கள் நாளை தமது பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .

தமது ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டு அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாளை பல்வேறுபட்ட பகுதிகளில் தமது பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் அதிபர்கள் தனது போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சுக்கு எதிராக திரும்பிய அதிபர் ஆசிரியர்கள்

கல்வி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுதல் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,நமக்கான அனைத்து விடயங்களும் தட்டுக் கழிக்கப்பட்டு காணப்படுவதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர் .

போதிய ஆசிரியர்கள் இல்லாத இடத்தை நிரப்புமாறு கூறியதாகவும் ,ஆசிரியர் அவர்களுடைய ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து தற்போது இந்த போராட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமான தீர்வுகளை தமக்கு ஏற்படுத்தி தருமாறும் எமது மாணவர் செல்வங்கள் உரிய முறையில் கல்வி கற்பதற்கு ஏற்ற வழிமுறைகளை செய்து தரும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாக குற்றசாட்டு

சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாகவும் , ஆசிரியருடைய ஊதியத்தில் ஒரு பகுதியை கல்வி திணைக்களம் பிடித்து வைப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது தேர்தலுடன் இடம்பெற உள்ள நிலையில் பாரிய பொருட்களின் விலைகள் குறைப்பு இடம்பெற்று வருகின்ற நிலையில், மக்கள் தமது போராட்டங்களையும் தீவிர படுத்தியுள்ளன.

இந்த போராட்டங்களின் பின்புலத்தில் எதிர்கட்சிகளுடைய சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஆளும் ரணில் விக்கிரம சிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு போராட்டமாகவே பார்க்கப்படுகின்றது.