அஞ்சாதே -காதல் செய்வோம் வா

Spread the love

அஞ்சாதே -காதல் செய்வோம் வா

உந்தன் பேச்சில் எந்தன் மனதில்
காதல் ஊறுதடி ……
உன்னை மறக்கா முடியா நிலையில்
உள்ளம் தவிக்குதடி …..

காலம் யாவும் உந்தன் மடியில்
தூங்கிட எண்ணுகிறேன் ….
கட்டளை தந்தால் போதுமடி – உன்
காலடி நான் கிடப்பேன் …..

வாழும் காலம் கொஞ்சம் தானே
வாழ்ந்தே மடிந்திடலாம் ….
வேதனை தாங்கி வாழும் வாழ்வு
வாழ்வின் விதி தானோ …?

ஆசை அடக்கி ஆயூள் பூராய்
அடி வாழ்வது முறைதானோ …?
அடக்கும் சமுகம் கண்டு பயந்தால்
அடி வாழ்தல் பிழைதானே …..

ஒடுக்கும் சிந்தை வாங்கி நெஞ்சில்
ஒளிவது முறைதானோ ….?
எதிர்க்கும் சிந்தை நெஞ்சில் தாங்கி
எழுவோம் எழுந்தே வா ….!

வன்னி மைந்தன் -(ஜெகன்- T )
ஆக்கம் -04/08/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply