Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க
Spread the love

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க

மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் Home made KFC Chicken வீட்டில் ஈசியாக செய்வது என்பது பற்றி கவலை வேண்டாம் .

வாங்க இப்பொழுதே நாங்கள் நம்ம வீட்டில் Home made KFC Chicken செய்து அசத்தலாம் வாங்க .

Home made KFC Chicken செய்முறை ஒன்று

தேவையான அளவு சிக்கின் எடுத்து ,அது கூட மோர் சேர்த்து உப்பு சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணி விடுங்க .
ஐந்து மணிநேரமா இவ்வாறு ஊறிய பின்னர் அதனை எடுத்து பாவிக்கலாம் .

இப்போ ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி இஞ்சி பூண்டு தூள் ,இரண்டு கரண்டி மிக்ஸ் பேபி ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,
இரண்டு கரண்டி வெனிகர் ,ஒரு கரண்டி சோயா சோஸ் ,தக்காளி சோஸ் ,சில்லி சோஸ் ,உப்பு பொறு நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க .

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க

இது கூட மோரில் ஊற வைத்த சிக்கனை எடுத்து போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க . மாசலா சிக்கனில் நன்றாக கலக்கி, மூன்று மணி நேரம் ஊற வைங்க .

இப்போ மைதா மா மற்றும் பால் பவுடர் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க .


இப்போ ஊறவைத்த சிக்கனை எடுத்து, இந்த மாவிலை போட்டு எடுங்க .


இப்போ மாவை அரித்து எடுத்து விடுங்க .மீளவும் இதை பாவிக்க போறம் ,கட்டிகள் அகன்ற பின்னர் இரண்டாவது தடவை பாவிக்கணும் .

அதன் பின்னர் தண்ணியில போட்டு, மீளவும் மாவிலை போட்டு எடுத்து ,அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க .

நன்றாக மொறு மொறு சிக்கன் நமக்கு கிடைக்கும் .

Home made KFC Chicken இப்போ ரெடியாடிச்சு .இதை இப்பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
அம்புட்டு தாங்க Home made KFC Chicken வீட்டில ரெடியாகிடிச்சு . .