9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு

9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
Spread the love

9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கடந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,199 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 122 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.