75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை

75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை

75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை

75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின்ஏற்பாட்டில், இஸ்லாமிய நிகழ்வும், மரம் நடுகையும் இடபெற்றது.

75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், திருகோணமலை – அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள ஹுலூர் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் விஷேட உரையும், துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண

ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுதந்திரதினம் பற்றிய உரையினை நிகழ்த்தினார்.

75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூரினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண

திணைக்களத் தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பயன்தரும் மரக்கன்றுகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்

வி.எச்.என்.ஜெயவிக்ரம ஆகியோரினால் பள்ளிவாசலின் முன்றலில் நட்டி வைத்தனர்.

அபு அலா –