49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம்

49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம்
Spread the love

49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம்

ஹல்துமுல்ல, கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறங்களிலும், அவதானமிக்க வலயத்தில் வசித்துவந்த மக்களை, அங்கிருந்து ​வெளியேறுமாறு அறிவுத்திய போதிலும், அந்த அறிவுறுத்தலை

கணக்கிலெடுக்காது, அங்கு தங்கியிருந்த 49 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பொலிஸாரின் தலையீட்டுடன் பலவந்தமாக திங்கட்கிழமை (16)

வெளியேற்றப்பட்டனர் என ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கணி தெரிவித்தார்.

49 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம்

காய்கறி தோட்டங்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள் மற்றும் பிற விலங்குகளை விட்டுவிட்டு தாம் வசிக்கும் இடங்களை விட்டு வெளியேற அம்மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த அபாயங்கள் தொடர்பில் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்ததாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே. திருமதி பிரியங்கனி மேலும் கூறினார்.

மீரிய​பெத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையுடன் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளின் பின்னணியிலும்,

எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.