3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்

3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்
Spread the love

3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த நிலையில், சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்துள்ளது.

  1. ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாய்.
  2. ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 414 ரூபாயாகும்.
  3. ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 338 ரூபாய்.
  4. சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 356 ரூபாயாகும்.
    05.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.

சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை மத்தேகொட பகுதியில் ஆரம்பித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது