258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு

258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு
Spread the love

258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு

இலங்கையில் 1983-ல் ஏற்பட்ட உள்நாட்டு போரால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி அகதிகளாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர். தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்திருந்தனர்.

இதில் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் 108 மறுவாழ்வு முகாம்களிலும், வெளியிலும் தங்கியுள்ளனர்.

2012-ம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக வருவோர், கைதுசெய்யப்பட்டு கடவுச்சீட்டு ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாகவும் வழக்குப் பதிந்து சிறைகளிலும், சிறப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்டு வந்தனர்.

258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு

2022-ல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து இதுவரை சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த 258 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

இவர்களை கைது செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது. மேலும் இவர்களுக்கு தங்குமிடமும் 3 வேளை உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக வந்துள்ளவர்களை எப்படிக் கருதலாம் என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக கடந்த 15 மாதங்களாக தமிழக அரசு காத்திருக்கிறது.

தமிழக முகாம்களில் வசிப்போருக்கு ஏற்கெனவே வழங்கப்படும் சலுகைகளைப் போன்று, 258 பேருக்கும் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது