2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்

பேரூந்து டிப்பர் மோதல்
Spread the love

2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்

குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதியான 44 வயதுடைய நபர; உயிரிழந்ததுடன், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.