13 வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Spread the love

13 வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பாத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளன.

அண்மைய நாட்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் முறைகேடுகள் பல இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையிலே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கை பெண்களை ஓமான் நாட்டுக்கு கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது