13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு

13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு

போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply