13 ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர
தீர்வாக அமையும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து பாராளுமன்றத்திலுள்ள ஹவுஸ் ஒஃப் லோட்ஸ் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.
இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய வரலாற்று கடமை இந்தியாவுக்கு உள்ளதாகவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள
நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
13 ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு
தமது இலங்கை பயணத்தின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி இதனை வலியுறுத்தியதாகவும் இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக அரசியலின் அதிகாரப் போட்டியில் இலங்கை பலியாகிவிடக்கூடாது என்பதிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மிகவும் கவனமாக உள்ளதாக அண்ணாமலை இதன்போது தெரிவித்துள்ளார்.