13 இற்கு நான் எதிரானவன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சில கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து எமக்கு சிறு அதிருப்திகள் காணப்படுகின்றன. அவ்வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு நான் எதிரானவன். இது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.
எனினும் ஜனாதிபதி இது குறித்து இறுதி தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நான் இது பற்றி தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் வினவிய போது ”13 ஆவது திருத்தச் சட்டத்தை சமர்பிப்பதை மாத்திரமே நான் செய்யப்போகிறேன். அதனை நிறைவேற்றுவது தொடர்பிலான தீர்மானம் பாராளுமன்ற
உறுப்பினர்களின் கைகளிலேயே உள்ளது. 13 தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை நான் கொண்டிருந்தாலும், நீங்கள் தான் நிறைவேற்றுபவர்கள்” என ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.
13 இற்கு நான் எதிரானவன்
அதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதாயின் பாராளுமன்றமே அதனை தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றம் என்பது நாமே.
எனவே, இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மீது குற்றஞ்சுமத்துவது அவசியமற்றது. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது எமது கைகளிலேயே உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் வரும் போது பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.