120 தமிழ் பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

Spread the love

வடக்கில் -120 தமிழ் பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் உடனடி அமுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 120 தமிழ் ,பொலிஸாருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான

கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தமிழ் பொலிஸார் தான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவுகின்றார்கள் என்ற

தொனியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் குறிப்பாக தமிழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பொலிஸார் மீது குறிவைக்கப்பட்டமை தொடர்பில் பல விசனங்கள் எழுந்துள்ளன. மூவின பொலிஸாரும் கடமையில் இருக்கின்ற போது, ஏனைய குறிப்பாக தமிழ் பேசும், தமிழ் பொலிஸார் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

120 தமிழ் பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

உண்மையில் லஞ்சம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் வெளியில் தகவல் செல்வதாக கூறி, இடமாற்றம் தொடர்பில்

செய்யப்பட்ட சிபார்சில், லஞ்சம் பெறுபவர்களுக்கும், தகவல் வழங்குபவர்களுக்கும், இடமாற்றம் வரவில்லை.

இந்த குறி வைப்பு, தமிழ் பொலிஸாரை பழி வாங்கும் நோக்கில் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்படாது, திறமையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதிலும், கடந்த காலங்களில் அதிக கஷ்டப் பிரதேசங்களான, மன்னார், அடம்பன், நெடுங்கேணி, வவுனியா, முல்லைத்தீவு, கொக்கிளாய், பகுதிகளில்

கடமையாற்றிவிட்டு, ஓரிரு வருடங்களில் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம், தமிழ் பொலிஸாரை பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பலரால் முன்வைக்கப்பட்ட போதிலும்,

இந்த இடமாற்றம் இன்னும் தமிழ் இளைஞர்களுக்கு பொலிஸில் இணைவதற்கான ஆர்வத்தை குறைப்பதுடன், பொலிஸ் நிலையத்தில் மொழி ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply