மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க

மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க
Spread the love

மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க

நம்ம வீட்டில மரக்கறி நூடில்ஸ் கொட்டல் சுவையில், இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .


கடையில் விற்கும் சுவையில், அதே சுவை மாறாத படி காய்கறி ,அல்லது மரக்கறி நூடில் செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

மரக்கறி நூடில்ஸ் செய்வது எப்படி ..?
நூடில்ஸ் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

மரக்கறி நூடில்ஸ் செய்முறை ஒன்று

நூடில்ஸ் வேக வைத்து அடுக்க அடுப்பில பாத்திரம் வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .

தன்ணியில ஒரு கரண்டி எண்ணெய் ,உப்பு சேர்த்திடுங்க ,.அப்புறம் நூடில்ஸ் போட்டு வேக வைத்திடுங்க .
90 வீதம் நூடில்ஸ் வேகி வரும் வரைக்கும் வைத்து எடுங்க .

நூடில்ஸ் நாம் சொன்ன பதம் வந்தத பின்னர் வெளியில் எடுத்திடுங்க .அப்புறம் தண்ணியை வைத்திடுங்க ,அப்புறம் தண்ணி சேர்த்து கழுவி எடுத்திடுங்க .

இப்போ அடுப்பில அடுப்பில கடாய் சூடாக்கி எண்ணெய் கூட பூண்டு பொடி ,பச்சை மிளகாய் ,இஞ்சி எல்லாம் வெட்டி கடாயில போட்டு வதக்கி கொள்ளுங்க .

கலர் மாறியதும் ,ஒரு வெங்காயம் ,கரட் ,ஒரு குடைமிளகாய் ,ஒரு கைப்பிடி அளவுக்கு முட்டை கோஸ் .
இவை எல்லாம் சேர்த்து வதக்கி வாங்க .

இப்போ மிளகாய் தூள் ,கரம் மசாலா ,மல்லித்தூள் ,நூடில்ஸ் மசாலா ,உப்பு,சீரகம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க .

முப்பது நிமிடம் வதக்கிய பின்னர் தக்காளி சோஸ் விட்டிருங்க .சோயா சோஸ் ,வினிகர் எல்லாம் விட்டு கலக்கி வதைக்கிடுங்க .

அதன் பின்னர் பச்சை வாசம் போன பின்னர் ,ஆற வைத்துள்ள நூடில்ஸ் எடுத்து போட்டு கலக்கி வாங்க .
நூடில்ஸ் உடையாம சேர்த்து கலக்கி வாங்க .

அடியில் இருந்து மேல் வரை நன்றாக கிளறி கலக்கி வாங்க .இப்போ சாப்பிடும் அளவுக்கு நூடில்ஸ் ரெடியாகிடிச்சு .

கொட்டல் சுவையில் மிக தரமான நூடில்ஸ் நம்ம வீட்டில செய்தாச்சு .அப்புறம் என்ன மக்களே ,குஷி தான் ,சுவையான நூடில்ஸ் இது போல தினம் செஞ்சு அசத்துங்க .

Leave a Reply