பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
Spread the love

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது

ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பரிசு

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாகரை, ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கு நிகழ்வு, ஊரியன்கட்டு பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வை. மங்களதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கௌரவ அதிதிகளாக வாகரை பிரதேச 233 ஆவது படைப் பிரிவின் பிரிக்கேடியர் வசந்த கேவகே, நாவலடி கஜபா ரெஜிமன்ட படைப்பிரிவின் உயர் அதிகாரி லசந்த, கல்குடா வலயக் உளவளத் துறை உதவி கல்விப் பணிப்பாளர் விஷ்வ ஜித்தன் ஆகயோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 200 குடும்பங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.

No posts found.