டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

Spread the love

டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம்,

கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை அடுத்தே இந்த

சமூக நலத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சுமார் 105 சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து 900

க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொது கட்டளைத் தளபதிகள், படைத்

தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்களித்துள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

Author: நலன் விரும்பி

Leave a Reply