ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

Spread the love

ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்துவதன் ஊடாகவே பொறுப்புக்கூற வைக்க முடியும் என்பதோடு, இனப்படுகொலைக்கான பரிகாரநீதி நீதிக்காக தமிழர் தேசம்

போராடிவரும் இவ்வேளையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான தீர்மான வரைவு வாக்கெடுப்பினை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் நிலை என்ன ? சர்வதே குற்றவியல் நீதிமன்றுக்கான ஆதரவு இல்லையா ? அடுத்த கட்டம் என்ன ? இப்படி ‘ஜெனீவா’ தொடர்பில் உள்ள ஆயிரம் ஆயிரம் கேள்விகள்,

கருத்துக்கள், சந்தேகங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெளிவுரை வழங்க இருக்கின்றார்.

இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கூட்டமான ZOOM செயலிமூலம் இடம்பெறுவதோடு, www.tgte.tv வலைக்காட்சி உட்பட பல்வேறு உலகத்தமிழ் ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரஞ்சலாக ஒளிபரப்பாக இருக்கின்றது.

ஞாயிறு 14-03-2021, US and Canada time:3.30 pm (Eastern Time) ,UK time: 7.30 pm, EU time: 8.30 pm மணிக்கு இடம்பெறுகின்ற இக்கூட்டத்தில் நேரடியாக https://us02web.zoom.us/j/81061037948?pwd=ZzduWWE0MFNLY2NYckxBNElpWDRUZz09 இந்த இணைப்பின் மூலம் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.

Home » Welcome to ethiri .com » ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

Leave a Reply