கோட்டபாய -வெளி நாட்டை காப்பி அடி

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Spread the love

இலங்கை –கோட்டபாய -வெளி நாட்டை காப்பி அடி

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், குடி வரவு மற்றும் குடியகழ்வு பத்திரம், பிறப்புச் சான்றிதழ்,

மரண சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் நேரம், உழைப்பு மற்றும் பணம் வீண்விரயமாவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தரவுகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஜனாதிபதி இன்று (30) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இதன் போதே ஜனாதிபதி கோட்டபாய மேற்குறித்த அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

தற்போது பல தகவல் மையங்களின் கீழ் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன.

எனவே மேற்குறிப்பிட்ட அனைத்து தரவுகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து அதனூடாக பொது

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

இதன் மூலம் தவறான மற்றும் மோசடியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரை அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும்.

எனவே அனைத்து நிறுவனங்களையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதன் மூலம் பாரிய அனுகூலங்கள் ஏற்படும்.

அதேபோல் நடைமுறையில் உள்ள தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சினால்

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் அனுகூலங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் பாடசாலைகளில் காணப்படும் கணனி ஆய்வக திட்டத்தை கல்வி அமைச்சிடம் ஒப்படைப்பதன்

முக்கியதுவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா,கனடா ,உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த முறைமை கையாள பட்டு வருகிறது ,அதனை அப்டியே காப்பி அடித்துள்ளார் கோட்டாபய .

அமெரிக்காவில் வாழ்ந்த கால பகுதியில் இந்த விடயங்களை நேரடியாக அனுபவித்த கோட்டா இதனை அமூல் படுத்தியுள்ளார் ,

இதுபோல தனிமனித அக்கருத்து ,மற்றும் மனித வாழ்வு ,பாதுகாப்பு ,சுதந்திரத்தை அளித்தால் சிறப்பாக இருக்கும்

அவ்வழியே நீதித்துறையை வாழ வைத்தால் இலங்கை உலக பரப்பில் செழிப்புறும்

Leave a Reply