கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்

Spread the love

கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்

கோடை காலத்தில் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி கட்டிகளை குணப்படுத்தும் வழியை காண்போம்.

கோடை காலத்தில் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். அந்த கட்டிகள் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் போல் வீங்கி வலியை ஏற்படுத்தும்.

இதற்கு ஆரம்ப நிலையிலேயே சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்வதுதான் சிறந்தது. வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி கட்டிகளை குணப்படுத்தும் வழியை காண்போம்!

  • உடல் சூடுதான் கட்டிகள் உருவாகுவதற்கு காரணம் என்பதால் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கால் பாதங்கள், நகங்களின் மேற்பரப்புகளில்
  • விளக்கெண்ணெய் தடவலாம். அது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்தன்மை கொண்டது. அதனால் கட்டிகள் உருவாகுவதை தவிர்த்துவிடலாம்.
  • கட்டிகள் வருவதை தவிர்ப்பதற்கான மற்றொரு வழி தண்ணீர் பருகுவதுதான். உடலில் நீர்ச்சத்து நன்றாக இருந்தால் உடல் சூடாகாது. கட்டிகள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.

கோடையில் உடலை வருத்தும் உஷ்ணக் கட்டிகள்

  • ஒருவேளை கட்டிகள் உருவாக தொடங்கிவிட்டால் மஞ்சளை பயன்படுத்தலாம். மஞ்சளை நன்றாக அரைத்து தண்ணீரில் கெட்டி பதத்துக்கு குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை கட்டி இருக்கும் இடத்தில் பத்து போடுவதுபோல் பூசலாம்.
  • இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்துவந்தால் சில நாட்களிலேயே கட்டிகளின் வீக்கம் குறைந்து விடும்.
  • வேப்பிலையையும் பயன்படுத்தலாம். அதனை நன்றாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும்.
  • கட்டிகளில் வீக்கம் அதிகமாக இருந்தால் கல் உப்பை பயன்படுத்தலாம். வாணலியில் கல் உப்பை கொட்டி லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதனை
  • காட்டன் துணியில் சுருட்டி, கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்துவர வேண்டும்.

  • தொடர்ந்து செய்துவந்தால் கட்டிகள் குணமாகிவிடும். சீழ் பிடித்திருந்தாலும் உடைந்து வெளியேறிவிடும்.
  • உடலில் சக்தியின் எதிரி செயல் பாட்டின் ஊடகாவே எதிர் நோய் தாக்குதலில் இருந்து விடுதலை பெற முடியும்

எதிர் மறை நோய்களின் எதிர் சக்தியை அதிகரிக்க எதார்த்தமான செயல்களை கண்டறிந்து செயல்பட வேண்டியது நமது பொறுப்பாகும்

    Leave a Reply