குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு

Spread the love

குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply