குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது

குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது
Spread the love

குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது

குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் கடந்த (05) காலை 10 மணியளவில் சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்புக்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

வரவுசெலவுத்திட்டப் பாதீட்டின் பின்னர் தவிசாளரின் விசேட உரையின்போது, நடப்பாண்டில் முன்மொழியப்பட்ட முடிவுறுத்தப்படாத அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவாக இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர்

முடிவுருத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பிரதேச மக்களின் பாதுகாப்பு மற்றும் பிரதேச காணி அபகரிப்பு உட்பட மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், மீன்பிடி, சுயதொழில் மேம்பாடுகள், அடிப்படை தேவைகள் மீது சபை மிகுந்த கரிசனையுடன் தொடர்ந்தும் செயற்பட்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.


சதிகார சக்திகளின் முகங்கள் ஓடி ஒழியும் வரை பிரதேச மக்களின் நலனுக்காகவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் மக்கள் தொண்டனாக நான் என்றும் செயற்படுவேன் என்றும் குறிப்பிட்டார்.

விசேடமாக, 2023 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட வாசிப்புக்கு
ஆதரவாக வாக்களித்த உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும்,
எனது வெற்றிக்கு வித்திட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம்,


கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.எஸ்.தௌபீக் ஆகியோர்களுக்கு நன்றிளைத் தெரிவித்தார்.

அபு அலா –