காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் இம்ரான் எம் பி

Spread the love

இன ஒற்றுமையை பாதிக்கின்ற, காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.- இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்.

பைஷல் இஸ்மாயில் –

தற்போது நாட்டில் சிலர் வீரப்பேச்சுக்களை பேசித்திரிந்தாலும் பொருட்களில் விலைகளை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பதாகவும், பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில பொருட்கள் மாபியா அடிப்படையில்

விற்கப்படுவதாகவும், தற்போது வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், ஏனைய வசதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதால் மக்கள் தனியார்

வைத்தியசாலையை நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் பாரிய அளவில் கஸ்டப்படுவதாகவும்

செவ்வாக்கிழமை (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பா உ இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் இம்ரான் எம் பி

மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது மக்கள் பல துன்பங்கள், துயரங்கள் அடைந்துள்ள சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் பிரதேசத்திற்குட்பட்ட இக்பால் நகர், உல்லைக்குளம் காணிகளில் வாழும்

தமிழ், முஸ்லிம் மக்களுடைய இன ஒற்றுமையை பாதிக்கின்ற வகையில் காணிப்பிரச்சினைகளை உருவாக்கி இன பிரச்சினைகளை உருவாக்க சில

நாசக்கார சக்திகள் முயற்சிப்பதாகவும் அது உடன் நிறுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், குச்சவெளி பிரதேசத்திற்குரிய சில காணிப்பரப்புகளை
கோமரன்கடவள பிரதேசத்திற்கு உள்வாங்குவதாக சொல்லி சில


அதிகாரிகள் அளவிட அந்த இடங்களில் வருகின்ற போது மக்களுக்கிடையில்
பிரச்சினை உருவாகுவதாகவும் இந்த நாடு சென்று கொண்டிருக்கின்ற இந்த சூழ்


நிலையில் இன ஒற்றுமையை பாதிக்கின்ற செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்


எனவும் அதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    Leave a Reply