எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

Spread the love

எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்று, பிரித்தானியாவில் பிரதான தமிழர் அமைப்புக்கள் அனைத்தும்

ஒன்றுபட்டு, சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து

தாய்மார்கள், உறவுகளது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

அந்தவகையில் பிரித்தானியாவில் சதுக்கத்தில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் Tamils for Labour party , ஆளும் கட்சியான பழமைவாத கட்சியின் Tamils for Conservative partyஅமைப்பு பிரமுகர்கள், உட்பட பலர் பங்கெடுத்திருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் வரலாற்று மையம், தமிழ் சொலிடாரிட்டி. நாம்தமிழர் கட்சி. வீரத்தமிழர் முன்னணி, தமிழர் விடுதலை நடுவம் ஆகிய தமிழர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்தன.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரத்தில் பிரித்தானியா முதன்மைப்பாத்திரம் வகித்து வரும் நிலையில்,

சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பினால் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

அந்தவகையில் தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா
அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு,

எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்


பொறுப்புக்கூற வைப்பத்தற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்


என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply