உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்

உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
Spread the love

உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வருடம் (2022) ஒக்டோபர் மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பினால், முன்பள்ளிகளுக்கு அனுசரணை

வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நிகழ்ச்சித்திட்டமான ‘வறுமையினால் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு மற்றும் வளர்ச்சி மட்டத்திற்குப் பாதிப்பேற்படாது பேணுதல் தொடர்பாக மட்டக்களப்பு,

அம்பாறை மாவட்டங்களின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தத்தம் பிராந்தியங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக முன்வைத்தனர்.

உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 558 முன்பள்ளிகளில் 18584 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் 209 முன்பள்ளிகளின் 6749 சிறார்களுக்கு தலா

மாணவருக்கு 100 ரூபா வீதம் 53.9மில்லியன் ரூபா நிதி காலை உணவு விநியோகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறுவர்களின் போஷாக்குஇ உளவள செயற்பாடுகள், போதைப்பொருட்களுக்கு எதிரான பாடசாலை மட்டச்செயற்பாடுகள் என்பன குறித்து மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் சமர்ப்பித்தார்.

பெற்றோர்கள் பொருளாதார சிக்கலில் சிரமப்படுவதால், பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தைப் பேணுவதற்காக வழங்குவதற்கு எதிர்பார்க்கும், உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஞ்சி

மா, பிஸ்கட் போன்றவற்றை வழங்கும் திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி அவசியப்படுவதை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ. எல். எம். ரிபாஸ் வலியுறுத்தினார்.

அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் எதிர்காலத்தில் ஒத்துழைப்புத் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பட்டார்.

பொருளாதார தளம்பல் காரணமாக மாவட்டத்தில் அதிகரித்து வரும்; பாடசாலை இடைவிலகல், சிறுவர் துஷ்பிரயோகம், கிராமங்களிலிருந்து

நகர்ப்புறங்களுக்கான மாணவர்களின் புலம்பெயர்வு, தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்தல் போன்றவை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்விமட்டத்தை அதிகரிப்பதற்கு சுயமாக நிலைத்திருக்கும் தன்மை, சமூக உளவள ஆதரவு, ஆளுமை விருத்தி என்பவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் தேவை குறித்தும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட வைத்திய அதிகாரிகள்இ கல்வித்துறை உயர் அதிகாரிகள்இ
யுனிசெப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No posts found.