இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

Spread the love

இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியை திணைக்க தற்போது 2,000 மெற்றிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இன்று காலை இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் இலங்கையை வந்தடைந்த போதிலும் , இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

எரிவாயுடவை பெற்றுடை மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் காத்துள்ளனர்

பல மைல்கள் தொலைவில் நீண்டு செல்லும் நிரையில் காத்து கிடந்த மக்களில் சிலர் மரணித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது ,லிட்ரோ நிறுவனம் தம்மிடம் எரிபொருள்,எரிவாயு கையிருப்பில் இல்லை என கையைவிரித்து வருகிறது

இதனால் சில எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கும் ,லிட்ரோ நிறுவன ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் கூட இடம்பெற்றன

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் தெளிவற்ற அரசியல் ,பொருளாதார கொள்கை காரணமாக இலங்கையில் இவ்விதமான பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது

இராணுவ தளபதியாக விளங்கியவர் இராணுவவ சிந்தனையில் நாட்டை ஆழ முயற்சித்து இன்று அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து மக்கள் மன்றில் அவமானப்பட்டு நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப நிலை சிக்கியுள்ளது

வீட்டுக்கு சிறந்த தலைவன் இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப அந்த தலைவனால் முடியும்

இவ்வாறான கோட்பாட்டு நிலையில் கோத்தபாய மேற்கொண்ட தவறான அரசியல் நகர்வும் பழிவாங்கும் அரசியல் வங்குரோத்தும் இன்று அவரை பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது

இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

எரிபொருள் தட்டுப் பாட்டால் மக்களின் அத்தியாவசிய செயல் பாடுகள் செயலற்று போயின ,பேரூந்துகள்,லாரிகள்,முதல் விவசாயமும் செயல் இழந்து போயிற்று

இதனால் அன்றாட விவசாய ,உணவு உறபத்தியில் பெரும் வீழ்ச்சியும் ,மக்கள் வாழ்வாதாரத்திலும் பெரும் இடி வீழ்ந்துள்ளது

போரை வென்று மக்களின் மனங்களை வென்றதாக ஆணவ குதிரையில் ஆடி வந்த ராஜபக்ச குடும்பத்திற்கு இலங்கையில் பெரும் அடி வீழ்ந்துள்ளது ,

தமிழர்கள் முஸ்லீம் எதிரியாக விளங்கிய நிலையில் இன்று சொந்த சிங்கள மக்களுக்கும் இவர்களுக்கு எதிரியாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மக்கள் வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையிலே ராஜபாக்ச குடும்பம் வீழ்ச்சி நிலையில் சிக்கியுள்ளது

வீழ்ந்து போன இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் ,அப்பொழுதே ஆட்சியாளர்களின் மனங்களில் ,சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்

அப்பொழுதே எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் ,மீளவும் இலங்கை இயல்பு நோக்கி நடைபயிலும் ,எரிபொருள் விலை உயர்வு ,மின்சாரம் தட்டுப்பாடு ,காய்கறிகள் விலை உயர்வு ,உரத் தட்டுப்பாடு

இவ்வாறான நெருக்கடிகள் தொடர்ந்து சென்றால் ஆளும் ஆட்சியாளர்களை மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வழியில்லை என்பதே இலங்கையின் இன்றைய கள நிலவராம் எடுத்து கூறு விடயமாக உள்ளது

மாற்றங்கள் எழுந்திட அரசியல் தலைவர்கள் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே நிகழ்காலம் கூறும் விடயமாக பதிந்து கிடக்கிறது .

    Leave a Reply