இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Spread the love

இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதிபர் கோத்தபயாவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள்

ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயகே ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது; பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அது தான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாக செய்திருக்கிறது!

ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்!

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply