இலங்கையில் நடக்கும் அவலம் – – வீடியோ

Spread the love

இலங்கையில் நடக்கும் அவலம் – – வீடியோ

இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கை வாழ் மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

அவ்விதம் இலங்கையில் நடக்கும் அவலம் தொடர்பான காணொளி ஒன்று சமுக வலைத்தளங்கள் ஊடக வைரலாகி வருகிறது.

இலங்கையில் நடக்கும் இந்த அவலம் தொடர்பான காணொளிகள் மற்றும் அதில் மக்கள் தெரிவிக்கும் உரையாடல்கள் யாவும் அரசுக்கு எதிரான ஒன்றாக மாற்றம் பெற்றுவருகிறது.

மக்கள் கருத்தியலை உற்று நோக்கும் பொழுது மிக பெரும் போரட்டம் ஒன்று
ஆளும் ரணில் மற்றும் கோத்தபாய ராஜபக்சே அரசுகளுக்கு எதிராக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடக்கும் அவலம் – – வீடியோ

எரிபொருள் தட்டுபாடு இலங்கையில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது .

இந்த அவலம் மக்கள் மனதில் ஆளும் அரசுகளுக்கு எதிரான வெறுப்புணர்வை சம்பாதித்துள்ளது .

நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே ஆட்சியாளர்களின் அவலம் இது. போரை வென்றதாக மார் தட்டிய ராஜபக்சே குடும்பத்தின் சாதனையில் இதுவும் ஒன்று .

இன்று இலங்கையில் நடக்கும் இந்த அவலம் என்று வரை தொடரும் என்பது மக்கள் கேள்வியாக உள்ளது .

இந்த அவலம் தொடராமல் தடுத்திட அரசியல் தலைமைகள் தமிழருக்கான தீர்வு திட்டத்தை வழங்குவதன் ஊடாக நாட்டை மீள் நிலைக்கு இயங்க வைக்க முடியும் .

ஆனால் அதனை ராஜபக்சே ஆட்சியாளர்கள் செய்வார்களா என்பதே சந்தேகம் .

அவ்விதம் இலங்கையில் உள் நட்டு பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட்டால் நாடு இயல்பு நிலைக்கு செல்வதுடன் அதுவே மிக பெரும் பொருளாதார செழிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் .

இந்த மாற்றம் இலங்கையில் நடக்கும் இந்த பேரழிவில் இருந்து நாட்டை மீட்கவும் புதிய தற்சார்பு பொருளாதரத்திற்குள் நகர்த்தி செல்ல முடியும் .

ஆபத்தில் இருந்து நாட்டை மீட்டு கொள்ளவும் ,வளமான வாழ்வியலை பெற்றுக்கொள்ளவும் பெரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது .

இதனை நன்குணர்ந்து செயல்பாட்டால் ஒன்றிணைந்த இலங்கைக்குள் மக்கள் மகிழ்வுடன் வாழும் வாழ்வியலும் ,அதன் பொருளாதாரமும் செழிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதே இயல்பாகிறது .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply