இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா

Spread the love

இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா

இலங்கை ;சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற தனது இராணுவச் செலவினங்கள் குறித்து பேச சிறிலங்கா மறுத்து வருகிறது .

இலங்கை மறுத்தாலும் நாங்கள் பேசாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ்.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற சிங்கள இராணுவம் வெளியேற்றினாலே, அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து கணிசமான அளவு மீள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் இடம்பெற்ற எழுக தமிழா நிகழ்வில் உரையாற்றும் போதே
இக்கருத்தினை முன்வைத்த அமைச்சர் சுதன்ராஜ் பேசினார் .


சிறிலங்காவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம்,
சர்வதேச நாணய நிதியம் உட்பட பல நாடுகள் முன்வந்துள்ளன.


சர்வதேச நாணய நிதியம் பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டுள்ளது.
இந்த உதவிகள் என்பன நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச அமைப்புக்கள்,
நாடுகள் வழங்க வேண்டும்.

இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ்.

பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணிகளில் ஒன்றாக இருக்கின்ற
இராணுவச் செலவினங்களை குறைக்கு வகையில் தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினை வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையினை விதிக்க வேண்டும்.


இந்தக் கோரிக்கையினை தமிழர்கள் வலுவாக சர்வதேசம் நோக்கி முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் இவ்வாரு தெரிவித்துள்ள பொழுதும் இவர்கள் கூற்றை இலங்கை ஆளும் ஜனாதிபத்தி கோட்டாபாய ராஜபக்சே மற்றும் பிதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்று கொள்வார்களா என்பது கேள்வியாகிறது .

இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கு ஒதுக்க படும் இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா அரசு நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு மீளும் என்கின்ற இவரது கேள்வி நிலையான கணிப்பாக உள்ளது .

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான விடயங்கள் எதுவாக உள்ளது என்கின்ற விடய தரவுகளை சமீப காலங்களில் அமைச்சர் சுத்தராஜ் வெளியிட்டு இலங்கை அரசை திகைக்க வைத்துள்ள செயல்கள் இடம்பெற்றுள்ளன என்கிறது நாடு கடந்த ஆதரவு சக்திகள் .

இலங்கை பேச மறுக்கும் விடயங்கள் பேசு பொருளாக்கி நகர்ந்து செல்லும் நாடு கடந்த அரசின் செயல் தோற்றம் நேரிய பார்வையின் நேர்கோட்டு அரசியல் தந்திரமாக பார்க்க படுகிறது .

இதில் அழுத்தி அமைச்சர் சுதன்ராஜ் பேச்சை பாருங்கள்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply