இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்
Spread the love

இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களை ஒகமுரா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா

முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் தீவு நாட்டிற்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, நாணய நிதிய பணியாளர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பின்னர் ஒகாமுரா விஜயம் செய்யவுள்ளார்.

நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையில் இந்த தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.