இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு

Spread the love

இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு

இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும்கமிஷன் தலைவர்களையும் சந்தித்தார்.


இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில்

ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

மேலும், இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக தலைவர்கள் மாநாடு வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று தனி விமானத்தில் இத்தாலி

புறப்பட்டு தலைநகர் ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பயணத்தில் நேபாளம், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிதாக பொறுப்பேற்ற

பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    Leave a Reply