
ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு
யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை
அவதானிக்க முடிந்தது.தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.
ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா
- சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
- சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது
- இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
- 21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு
- இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
- போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
- சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்
- ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
- மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு