வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
இதனை SHARE பண்ணுங்க

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க