வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது

வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் காரில் பயணித்த சந்தேக நபர் குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 72 இல் கடமையாற்றும் பெண் வைத்தியர் மற்றும் ஆண் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இச்சம்பவத்தின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.