வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் அடித்த இளைஞன்

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் அடித்த இளைஞன்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரை செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் 27 வயதான நபரை பண்டாரவளை பொலிஸாரால் நேற்று கைது செய்யதுள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணி புதன்கிழமை (21) மாலை உடரட மெனிக்கே புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வெளிநாட்டுப் பெண் புகையிரதத்தில் ஜன்னல் ஓரத்தில் இருந்து செல்லும் போது, புகையிரதத்திற்கு வெளியில் நின்ற இளைஞன் தனது செருப்பை அவர் மீது வீசியுள்ளார்.

இதன்போது, செருப்பு குறித்த பெண்ணின் முகத்தில் பட்டமை குறிப்பிடத்தக்கது.