வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

இன்று (05) காலை வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

காயமடைந்தவர் உடுகம்பொல, மாதல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.