வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Spread the love

வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

வெலிக்கடை, பரண கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னலை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நிறுவனத்தின் முகாமையாளர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

அருகில் 9 மிமீ தோட்டா துண்டும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை பயமுறுத்துவதற்காக யாரோ துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.